பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் முன் இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைக்கப்பட்டுள்ளது.
இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது இதற்கு முன்னர் இரண்டு கோப் குழு அமர்வுகளின் போதும் வெளியிடப்பட்ட 02 விசேட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழுவிற்கும் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இன்றைய கலந்துரையாடலுக்கு கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கவுள்ள அறிக்கையில் முன்னர் கிரிக்கட் சபைக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.