தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.