இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய கூட்டம் நவம்பர் 18 முதல் 21 வரை அஹமதாபாத்திலும், அதன் இயக்குநர்கள் குழு கூட்டம் 21ம் திகதியும் நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இது குறித்து ஆராயப்படும் என்றும் சபை கூறுகிறது.