ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
இதன்படி, மைட்லண்ட் வீதி, டொரிங்டன் சந்திப்பில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை சீலரதன தேரரும் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அவரை நடுவழியில் தடுத்தாலும், பின்னர் கடிதம் கொடுக்க அவருக்கு வாய்ப்பளித்தனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குவது தொடர்பான விவாதம் இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.