காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களால் கடந்த சில நாட்களில் மாத்திரம் 241 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த 7ஆம் திகதி மோதல் ஆரம்பமானது முதல் காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,569 ஆக உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறந்தவர்களில் 4,324 குழந்தைகளும் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தலைவர் மொசென் அபுசினா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.