பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதாக அமேசான் கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரிக்காரின் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
காஸா மக்கள் மீதான இன அழிப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளுக்கு தனது கண்டனத்தை வௌியிடுகிறேன். போரில் குழந்தைகளின் உடலங்களே உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்து விடுவது போல காஸா குழந்தைகள் பூக்களாகவும், பிஞ்சுகளாகவும் கருகிக்கிடப்பது தாங்கமுடியாத மனவேதனையைத் தருகின்றது.
காஸா மக்களுக்கு எதிரான இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்து நிற்கும் அரபு நாடுகளும் ஏனைய நாடுகளும் தமது பொருளாதார நலனையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தமது அடிமை விசுவாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறார்கள். இதில் அவர்களின் அரசியல் பொருளாதார அதிகார நலன்கள் இருக்கின்றது.
இந்த விடயத்தில் பக்கச் சார்பாக இல்லாமல் தற்போது கவனம் செலுத்தப்பட்டடை விடவும் ஐக்கிய நாடுகள் சபை கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.
பாதுகாப்பான சுதந்திரமான பலஸ்தீன நாடு அமைவதை உலகின் பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்டு வருவது போன்று அந்த மக்களின் இறையாண்மைக்காகவும் சுதந்திர உரிமைக்காகவும் பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதற்கு ஒன்று கூடுமாறு வேண்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
காஸா மக்களுக்கு நீர் இல்லை. மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. மருந்துகள் இல்லை. பாதுகாப்பு இல்லை. தஞ்சம்புகுவதற்கு பொருத்தமான இடமில்லை. கொல்லப்பட்டவர்கள் பாரிய குழிகளில் புதைக்கப்படுகின்றார்கள். மற்றவர்கள் மரணத்திற்காக காத்திருக்கின்றார்கள்.பலஸ்தீன மக்களை உலக நாடுகள் உண்ணிப்பாக அவதானித்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார் .