காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் தெற்கு கடற்கரைக்கு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது, மேலும் காசா பகுதி வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதே அவரது நோக்கம். ஆனால், இப்போதைக்கு போர் நிறுத்தத்துக்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.