Date:

கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால குழுவை நியமித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சரினால் இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கிரிக்கெட் சபை அதற்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணிகளான ரக்கித ராஜபக்ஷ, ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...