ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களின் ஊடாக, இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை எதிர்நோக்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயற்பாடுகளுக்கு தமது அதிருப்தியை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.