இந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எந்த அடிப்படையில் இன்றைய இலங்கை அணியின் தெரிவு இடம்பெற்றது என்பது குறித்து வினவ எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அணியிலிருந்து தனஞ்ஜய டி சில்வா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த தெரிவு செய்யப்பட்டமை பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணி நேற்றைய போட்டியில் மிக மோசமாக விளையாடியமைக்கான காரணம் தொடர்பிலும் வினவ ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளதாக அறிய முடிகின்றது.