ரபா எல்லை ஊடாக காசாவில் இருந்து வெளியேறுவதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் காணப்படுகின்றன.