இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று(31.10.2023) 10.9 வீதத்தால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
அத்துடன், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளன.