Date:

அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்..! இலங்கையில் பரபரப்பு!

நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (31) பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த  49 வயதான நபர் எனத் தெரிய  வந்தது.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்திலும்  சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபரின் உடலில் இரத்தம் வடிந்து உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஸ்மல்ல பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...