Date:

கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணியின் ஆரம்பத்தில், பேரணியை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இதன்போது, கலவரமாக நடந்து கொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அதன்படி அவர்கள் தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...