அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம – மிரிஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தனியார் பஸ், கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி நேற்றிரவு பயணித்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கொழும்பு-அவிசாவளை பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.