Date:

போதையில் தனது வீட்டுக்கு தீ வைத்து எரித்த இளைஞன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டட போது எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தவிட்டார்.

வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.போதைவஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் ஐஸ் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர் என கைதான நபரின் தந்தை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...

மீண்டும் இணையும் லசித் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி...

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர்...