Date:

வழக்கு விசாரணைக்கு சென்ற பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – சந்தேக நபர் தப்பியோட்டம்..!

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்ற பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தனது வீட்டில் இருந்து ஐந்து பவுண் தங்கப் நகைகளை காணவில்லை என தனது சகோதரன் சந்தேகிப்பதாக பெண் பாதுக்க பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார்.

வீட்டுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...