Date:

மேலதிக வகுப்பிற்கு சென்ற 16 வயதுடைய சிறுமி மாயம்..!

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்  தெரிவித்தனர்.

கோஷிலா ரோஷேன் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் தெரிவித்தார்.

குறித்தசிறுமி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய்,

அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்தும் காத்திருக்க முடியாமல்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம்.

யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...