ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு நான்கு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நான்கு வாரங்களுக்கு அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது சபாபீடத்தில் ஒழுக்கமற்ற முறையிலும், செங்கோலை அவமதிக்கும் வகையிலும் நடத்துகொண்டார் என்பதற்காகவே, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.