Date:

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை பெண் கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதுடையவர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தூதரகத்திடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...