கொழும்பு – கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
குறித்த துப்பாக்கி சூட்டின் போது அலுவலக கட்டிடத்திற்குள் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருந்துள்ளார், எனினும், அவருக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று புல்லட் குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை எனினும், சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
