உலகை உலுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய காசா வைத்தியசாலை மீதான விமானப் படை தாக்குதலில் ஒரே இரவில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பை பாலஸ்தீன ஜனாதிபி மஹ்மூத் அப்பாஸ் இரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான 11-வது நாள் யுத்தம் உலகை பெரும் அச்சமும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது. காஸா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த வைத்தியசாலை (Al-Ahli Baptist Hospital ) மீது சரமாரியாக் இஸ்ரேல் விமானப் படை குண்டுகளை வீசியது. இஸ்ரேல் வீசிய குண்டுமழையால் அந்த பிராந்தியமே பேரதிர்வுக்குள்ளானது.
இத்தாக்குதலில் ஒரே நேரத்தில் 500 இக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த நிலையில் இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லபட்ட சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினம் கடைபிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் அப்பட்டமான இனப்படுகொலை என பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஜிஹாதிகளும் இது இனப்படுகொலை என குற்றம்சாட்டி உள்ளன.
இஸ்ரேல் இந்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைக்கும் இந்த தாக்குதல்களை கைவிட வேண்டும் என துருக்கியும் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலின் இத்தாக்குதலை ஜோர்டானும் கடுமையாக கண்டித்துள்ளது.
மருத்துவமனை மீதான இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதலை ஐநாவின் உலக சுகாதார அமைப்பும் கண்டித்துள்ளது. இப்படியான ஒரு தாக்குதலுக்குப் பின்னரும் உலகம் அமைதியாக் இருப்பது கொடூரமானது என லெபனான் வேதனை தெரிவித்துள்ளது.