Date:

கொழும்பில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்.

கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 9 உத்தியோகபூர்வ முத்திரைகள், 5 கிராம சேவை சான்றிதழ்கள், 9 பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராகம – சிறிவர்தன வீதியில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இந்த வீடு 6 மாதங்களுக்கு முன்னர் 8,500 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.

இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக கூறிய, 3 இலட்சம் ரூபாய் முதல் பெருந்தொகை பணம்சந்தேக நபரினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட – மஹரகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...