இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிவந்த தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் தமது பதவியை இராஜினாமா செய்து வருகின்றனர்.
மேலும் இவ்வாறு இராஜினாமா செய்தவர்களில் பெரும்பாலானோர் வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இதன்காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.