Date:

பதவியிலிருந்து நீக்கப்பட்ட தயாசிறிக்கு மீண்டும் முக்கிய பதவி..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் 06 பேர் உள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர அப்பதவியைப் பொறுப்பேற்றால் சிரேஷ்ட உப தலைவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயரும்.

தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியில் இணைந்தால் அவருக்கு கட்சியின் தலைவர், செயலாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவிகளை தவிர வேறு பதவிகள் வழங்கப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவருக்கு மூத்த துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

எனினும் தயாசிறி ஜயசேகர தற்போது தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...