இந்த வருடத்தின் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் ஜப்பானிய யென்னுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி 26.7 சதவீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்டுக்கு நிகரான பெறுமதி 10.7 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
அத்துடன், யூரோவுக்கு நிகராக 13.4 சதவீதத்தினாலும் இந்திய ரூபாய்க்கு நிகராக 12.8 சதவீதத்தினாலும் இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
