Date:

5 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பித்தனர்.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...