கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 5ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர் ஒருவரே நேற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW