பாலஸ்தீனத்திற்கு உதவ சென்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரோவ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும். ரஷ்யாவின் வாக்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக திரும்பியபோது அதை எதிர்த்து சண்டையிட்டது இந்த துணை ராணுவ படைதான்.
இந்த படையின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் தான் இப்போது பலஸ்தீனுக்காக படைகளை அனுப்ப முன்வந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துரைக்கையில்,
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும், அதேபோல மேற்குலக நாடுகள் போராளிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்தப் போரில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம், நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம், இது மற்ற மோதல்களைப் போலல்லாமல் மேலும் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.
மத்திய கிழக்கின் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் பிரிவுகளை நிலைநிறுத்த நாம் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW