இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆளுகைக்குட்பட்ட காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. காஸா பகுதிகளில் உள்ள ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை நோக்கி இஸ்ரேல் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.
போர் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்ட சூழலில், ஹமாஸ் படைகளின் பதுங்கு குழிகள், மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் நள்ளிரவிலும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் படையினரும் தாக்குதலை தொடர்ந்தனர்.
ஹமாஸ் குழுவினர், இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தரப்பிலும் ஆயித்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடுமென கூறப்படுகிறது.