கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்திப் பின்னணி
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பஸ் மீது மரம் ஒன்று இன்று (06.10) காலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பயணிகள் பஸ் குடை சாய்ந்ததுடன், பஸ்ஸில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.