Date:

2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய ஆக்கிரமிப்பும் அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு வழியமைத்துள்ளன

2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய யுத்தம் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடையவும் அந்த நாட்டின் மிக நவீன உட்கட்டமைப்பு
வசதிகள் சீர்குலையவும் காரணமாக அமைந்தது.

பெற்றோலிய வளம் மிக்க அந்த நாடு இன்று ஒரு வெற்று பூமியாக மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் லிபியாவில் 20 ஆயிரம் உயிர்கள் பலியாகவும் மேலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போகவும் காரணமாக இருந்த பெரு வெள்ளத்துக்கு இந்த ஆக்கிரமிப்பு யுத்தமும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக சில தகசவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து அது பற்றி பல பத்தி
எழுத்தாளர்கள் எழுதி உள்ள கருத்துக்களில் இதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 2010ஃ11 அரபு வசன்த போராட்டத்தின் போது
லிபியா மக்களும் அரசியல் சுதந்திரத்துக்காக விழித்தெழுந்தனர். மக்களின் இந்த
உரிமைக் குரல்களுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக லிபியாவின் அன்றைய
சர்வாதிகார ஆட்சியாளர் முஅம்மர் கதாபி அந்த மக்கள் எழுச்சியை நசுக்க
முனைந்தார்.

அது லிபியா மக்களுக்கும் லிபியா அரசுக்கும் இடையிலான ஒரு உள்வீட்டு
பிரச்சினையாகத் தான் இருந்தது. ஆனால் இந்த நெருக்கடி நிலையை தமக்கு
சாதகமாக்கிக் கொண்ட நேட்டோ அமைப்பு தேவையின்றி அந்த உள்நாட்டு
பிரச்சினையில் மூக்கை நுழைத்தது. இதனால் மோசமான குண்டு வீச்சுக்கு
இழக்கான லிபியாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.
நாட்டின் உள்கட்டமைப்பு முற்றாக நாசமாக்கப்பட்டது. அழகிய அந்த நாடு
கிட்டத்தட்ட ஒரு கொலைகளமாக மாற்றப்பட்டது.

இந்தக் குழப்பங்களின் நடுவே அவர்கள் லிபியா தலைவர் கதாபியையும் துரத்திச்
சென்று கொன்றனர். அதன் பிறகு அந்த நாட்டை இரு கூறுகளாகப் பிரித்து அங்கு
மேலும் குழப்பங்களையும் அரசியல் ஸ்திரமற்ற நிலையையும் உருவாக்கினர்.
இன்றும் அந்த நிலைமைதான் அங்கு தொடருகின்றது.

அமெரிக்க – நேட்டோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாசகார சக்திகளால் இன்றும்
தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற முஸ்லிம் நாடுகளை அழித்து
சின்னாபின்னமாக்குகின்ற சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகத் தான் இது
முன்னெடுக்கப்பட்டது. ஈராக் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் ஏனைய பலம்
பொருந்திய செல்வம் மிக்க முஸ்லிம் நாடுகளையும் அழித்து இஸ்ரேலை அந்தப்
பிராந்தியத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது தான் இதன் இலக்கு.

பெட்ரிக் மார்டின் என்ற பத்தி எழுத்தாளர் எழுதியுள்ள “அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் நயவஞ்சகமும் லிபியாவில் ஏற்பட்ட பெரு வெள்ளமும்” என்ற
தலைப்பிலான ஒரு கட்டுரையில் “லிபியாவில் வெள்ளத்தால் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்ட தெராணா பிராந்தியத்தில் மனிதாபிமான நிவாரணங்கில் ஈடுபட்டு
வரும் தர்ம ஸ்தாபனங்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்யுமாறு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டுவிட்டரில் அல்லது
எக்ஸில் தன்னைப் பின்பற்றும் 132 மில்லியன் பேரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

லிபியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவுவதாக இருந்தால்
நிவாரணங்கள் வழங்கும் இந்த அமைப்புக்கள் பற்றி கொஞ்சம் பரிசீலித்துப்
பாருங்கள் அப்போது புரியும் ஒபாமா தனது சொந்த அமைப்புக்களுக்கு உதவுமாறு
தான் கேட்டுள்ளார் என்பது”

ஒபாமாவின்; கூற்று சமூக ஊடகங்களில் மோசமான பின்னூட்டங்களை
தந்துள்ளது. லிபியாவின் அழிவுக்கு வழிவகுத்தமைக்காக ஒபாமாவும் தனிப்பட்ட
முறையில் பொறுப்பேற்க வேண்டும் என நியாயமான காரணங்களை முன்னிறுத்தி
மக்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். 2011ல் அவரது தலைமையின்
கீழான அரசு தான் நேட்டோவுடன் லிபியாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு
நீண்ட நாட்களாக லிபியாவை ஆட்சி செய்த கதாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டி
அந்த நாட்டை அழித்தது. ஆத்திரத்தில் வீசப்பட்ட குண்டுகள் அந்த நாட்டில்
மேசமான சிவில் யுத்தத்தை ஏற்படுத்தி இன்றும் அது தொடருகின்றது. இதனால்
ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் செல்வம் மிக்க நாடாக இருந்த லிபியா இன்று
வெற்று பூமி ஆக்கப்பட்டுள்ளது.

லிபியா யுத்தத்துக்கு காரணமாக இருந்த அமெரிக்காவின் ஏனைய உயர்
அதிகாரிகளில் அன்றைய உதவி ஜனாதிபதியும் இன்றைய ஜனாதிபதியுமான ஜோ
பைடன் மற்றும் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் ஆகியோர்
முக்கியமானவர்கள். இந்த யுத்தத்தை பொது அரங்குகளில் நியாயப்படுத்தி
பிரசாரங்களில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான். கதாபியை படுகொலை செய்வதில்
அமெரிக்க நேட்டோ பங்கை பகிரங்கமாக பெருமையுடன் புகழ்ந்துரைத்தவர்

ஹிலரி கிளின்டன் “நாங்கள் வந்தோம், நாங்கள் பார்த்தோம், அவரும் மரணித்து
விட்டார்” என்று பெருமையாக அவர் கூறினார்.

லிபியா மக்கள் மீது அனுதாபம் தெரிவித்து அவர்களுக்கு உதவுமாறு ஜோ
பைடனும் கோரிக்கை விடுத்துள்ளார். “நானும் எனது மனைவியும் லிபியாவில்
வெள்ளம் காரணமாக தமது அன்புக்கு உரியவர்களை இழந்த ஒவ்வொரு
குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
என்று அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுக்கு அமெரிக்கா அவசர நிதி
உதவிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
எவ்வளவு அனுப்ப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நிச்சயமாக அந்தத் தொகை அவர்கள் 2011ல் லிபியாவுக்கு எதிரான யுத்தத்துக்கு
செலவிட்ட 1தசம்1பில்லியன் அமெரிக்க டொலர்களாகவோ அல்லது அதற்கு
கிட்டிய ஒரு தொகையாகவோ அல்லது தற்போது ரஷ்ய யுக்ரேன் யுத்தத்துக்கு
செலவிடப்படடு வரும் தொகைக்கு கிட்டியதாகவோ அமையப் போவதில்லை.

லிபியாவின் தெராணா நகரில் 2023 செப்டம்பர் 13ல் எடுக்கப்பட்ட படம்.
தெராணாவில் வெள்ளத்தால் அல்லுண்டு மரணம் அடைந்தவர்கள் அடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் சோகத்தோடு அமர்ந்திருக்கும் ஒருவர்
லிபியா யுத்த நிவாரணத்துக்காக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள
வேண்டுகோளில் கோரப்பட்டுள்ள தெகை 71 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளோடும் யுக்ரேன் யுத்தத்துக்காக
செலவிடப்பட்டு வரும் தொகையோடும் ஒப்பிடுகையில் இது ஒரு சொற்ப தொகை

மட்டுமே. யுக்ரேன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன்
செலவிட்டுள்ள தொகை சுமார் 40 பில்லியன் டொலர்களாகும். ஆனால் லிபியா
வெள்ள நிவாரணத்தக்கு அவர்கள் வழங்கவுள்ள தொகை வெறும் 537இ000
டொலர்கள் மட்டுமே.

ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையும் லிபியா அழிவுக்கு பொறுப்பேற்க
வேண்டும். 2011 மார்ச் 17ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை லிபியா மீதான
நடவடிக்கைக்கு அதரவளித்தது (ரஷ்யாவும் சீனாவும் வாக்களிப்பில் கலந்து
கொள்ள வில்லை. அவர்கள் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கவும்
இல்லை) இதன் படி லிபியாவின் பெங்காஸி நகரம் உட்பட சகல நகரங்களிலும்
மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் எதையும் செய்யும் அதிகாரம்
பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்
சொற்பிரயோகங்களை லிபியா மீதான தனது ஏகாதிபத்திய தாக்குதலுக்கான
அங்கீகாரமாக அமெரிக்கா எடுத்துக் கொண்டது. பெங்காஸி நகர மக்களை
கதாபியின் படைகள் கொன்று குவிக்கப் போகின்றன. அவர்களை காப்பாற்ற
வேண்டும் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அமெரிக்காவும்
நேட்டோவும் களமிறங்கின. தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களில் லிபியா
மீதாக குண்டு வீச்சும் தொடங்கப்பட்டது.

இந்த யுத்தம் மூலம் லிபாயின் அதிபர் கதாபி உட்பட 25000 மக்கள் கொன்று
குவிக்கப்பட்டனர். அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் மற்றும்
புலனாய்வு பிரிவு சிஜஏ என்பனவற்றாலும் பிரிட்டன் பிரிhன்ஸ் ஆகிய
நாடுகளாலும் பயிற்றுவிக்கப்பட்டு கூலிக்கு அமர்த்தப்பட்ட கூலிப் படையினரால்
கதாபி மிக மோசமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்தக் கூலிப்டையைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சிஜஏ யால் நேரடியாகப்
பொறுப்பேற்கப்பட்டு கப்பல் வழியாக சிரியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிரியா
ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிரான போராட்டத்தில்
ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஜஎஸ்ஜஎஸ் என்ற நாமத்தில்
அடையாளப்படுத்தப்பட்டனர். இந்தக் கொடிய கூலிப்படை கெரில்லாக்கள்
கப்பலில் ஏற்றப்பட்ட துறைமுகம் இன்று வெள்ளத்தால் பெரும் அழிவுக்கு
உள்ளாகி உள்ள தெராணா பிரதேச துறைமுகம் என்பதும் இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா தலைமையிலான இந்த யுத்தம் லிபியாவுக்குள் பெரும் அழிவை
உண்டாக்கியது. இந்த யுத்தத்துக்கு முன் பொருளாதார ரீதியாக ஆபிரிக்காவில்
மிகவும் செழுமையும் சுபிட்சமும் மிக்க ஒரு நாடாக லிபியா திகழ்ந்தது. இன்று அது

நவீன உட்கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட வறுமையும் பற்றாக்குறைகளும்
தாண்டவமாடும் ஒரு நாடாக மாறி உள்ளது. யுத்தம் தொடங்கிய ஆண்டான
2011க்கு முந்திய ஆண்டில் அதாவது 2010ல் லிபியாவின் மொத்த உள்நாட்டு
உற்பத்தி தலா வீத வருமானம் 11இ611 அமெரிக்க டொலர்களாகும். 2021ல் இது
அரைவாசிக்கும் அதிகமாகக் குறைந்து 5இ909 டொலர்களாகக் காணப்பட்டது.
2010ல் இருந்து 2021 வரையான காலப்பகுதியில் நாட்டின் தேறிய சொத்து 21
வீதத்தால் சரிவடைந்துள்ளது. ஆபிரிக்காவின் ஏனைய வறுமை மிக்க நாடுகளான
எதியோப்பியா (591வீதத்துக்கு மேல்)) கென்யா (468 வீதத்துக்கு மேல்) நைஜீரியா
(230 வீதத்துக்கு மேல்) போன்ற நாடுகளின் நிலைக்கு லிபியாவும் வந்துள்ளது.

லிபியா மீதான அமெரிக்க நேட்டோ குண்டு வீச்சு அதனைத் தொடர்ந்து அந்த
நாட்டின் பெருவாரியான பெற்றோலிய வளம் மற்றும் வாயு வளம் என்பனவற்றின்
மீகு குறிவைத்து செயற்படும் வெவ்வேறு வெளி நாட்டு சக்திகளால்
ஆதரிக்கப்படும் போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், இன்று
ஆபிரிக்காவின் மிகப் பெரிய சிவில் யுத்தமாக உருவெடுத்துள்ளன. லிபயா இன்று
பெங்காஸியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கிழக்குப் பிராந்திய நிர்வாகம்,
தலைநகர் திரிப்போலியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மேற்குப் பிராந்திய
நிர்வாகம் என இரு கூறுகளாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளது.

இதில் கிழக்கு பிராந்திய ஆட்சி கலீபா அப்தார் என்பவரின் தலைமையில்
செயல்படுகின்றது. முன்னர் ஒரு காலத்தில் இவர் அமெரிக்காவின் உளவு
சேவையான சிஜஏ யின் ஒரு சொத்தாக மதிக்கப்பட்டவர். இப்போது அவர்
பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சகாவாக மாறி உள்ளார்.
தெராணா பிராந்தியத்தை எப்போதுமே சந்தேகக் கண் கொண்டு நோக்கியவர்.
காரணம் அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளினதும் அமெரிக்க
உளவாளிகளினதும் நடவடிக்கைகள் அதிகம் காணப்பட்டது. தாக்குதல்கள் மூலம்
சேதம் அடைந்த அந்தப் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவோ
ஸ்திரப்படுத்தவோ எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அந்த
நகருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்த இரண்டு பிரதான
நீர்த்தேக்கங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பல தடவைகள் சுட்டிக்
காட்டப்பட்டு அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
வழமையாக வரண்டு போய் காணப்படும் இந்த நகரை ஊடறுத்துச் செல்லும்
நதியின் படுகை பெருமழை காரணமாக ஊற்றெடுத்து வெள்ளம் ஏற்பட்ட போது
அதை தாங்கவோ அல்லது தடுக்கவோ ஏற்கனவே கண்ணுக்குத் தெரியும்

வகையில் பெரும் வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நீர்த்தேக்கங்களால் முடியவில்லை.
இதுவே மாபெரும் அழிவுக்கு வழியமைத்தது என்று தற்போது தெரிய வந்துள்ளது.
அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் வீசிய டேனியல் என்ற புயல் காரணமாக
பிரதான இரண்டு நீர்த்தேக்கங்களும் மிக மோசமாக சேதமடைந்தன.

மாற்றமடைந்த மோசமான காலநிலை காரணமாக பல நகரங்களில் கன மழை
பொழிந்தது. இந்தப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கான சராசரி
மழை வீழ்ச்சி ஒரு சில மணிநேரங்களில் பொழிந்தது. இந்த கனமழை
கொள்ளலவை தாங்க முடியாமல் நீர்த்தக்கங்களில் சுவர்கள் இடிந்து வீழ்ந்தன.

இந்த அணைகளைத் தவிர வேறு எந்த நீர் தடுப்பு பாதுகாப்பும் இல்லாத சுமார் ஒரு
லட்சம் மக்கள் வாழும் நகரம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டது. முழு
பிரதேசமும் வெள்ளக்காடாகியது. பல கட்டிடங்களும் சுமார் நாலுக்கு ஒன்று என்ற
அடிப்படையில் சரிந்து விழுந்து மண்ணோடு மண்ணாக அல்லுண்டு சென்றன.

இந்த ஒட்டுமொத்த மனிதப் பேரழிவுக்கு மூல காரணமாக அமைந்தது ஒபாமா
மற்றும் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகமும் நேட்டோ குண்டு
வீச்சும் தான் என்பது பற்றி அமெரிக்க மற்றும் மேற்குலக ஊடகங்கள் எதுவும்
பேசாமல் வாய்மூடி மௌனம் காத்தன. இவ்வளவு நடந்தும் அரசியல் ரீதியாகவோ
அல்லது சட்ட ரீதியாகவோ வாஷிங்டனின் யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக
எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதும்
கவலைக்குரியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலியர்களுக்கு மாலைத்தீவு தடை

இஸ்ரேலிய கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மாலத்தீவு குடியரசிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்...

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.   ரிச்டர் அளவுகோலில் 5.9...

நிலவும் வெப்ப நிலை குறித்து எச்சரிக்கும் வைத்தியர்கள்!

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373