இன்று அதிகாலை (02) முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் ( CEYPETCO) மற்றும் லங்கா ஐ.ஓ.சி.( LANKA IOC) எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.
பெற்றோல் 92: ரூ. 4 இனால் – ரூ. 361 இலிருந்து ரூ. 365
பெற்றோல் 95: ரூ. 3 இனால் – ரூ. 417 இலிருந்து ரூ. 420
ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 341 இலிருந்து ரூ. 351
சுப்பர் டீசல்: ரூ. 62 இனால் – ரூ. 359 இலிருந்து ரூ. 421
மண்ணெண்ணெய்: ரூ. 11 இனால் – ரூ. 231 இலிருந்து ரூ. 242
இதேவேளை நேற்று 6 மணி முதல் அமுலாகும் வகையில் SINOPEC Energy நிறுவனம் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 358
பெற்றோல் 95: ரூ. 6 இனால் – ரூ. 414 இலிருந்து ரூ. 420
ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 338 இலிருந்து ரூ. 348
சுப்பர் டீசல்: ரூ. 61 இனால் – ரூ. 356 இலிருந்து ரூ. 417