இந்த குழந்தையின் மேல் உதட்டில் தீக்காயங்களின் அடையாளமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகாத வார்த்தைகளை கூறியதால், நிறுத்தும்படி பயமுறுத்துவதற்காக, தீக்குச்சியைக் கொளுத்தி, தனது பிள்ளையின் வாயில் நெருக்கமாக வைத்திருந்ததாக சந்தேகநபர் கூறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தக்குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.