குரங்கு ஒன்று அலுவலகத்தில் வேலை செய்யும் காணொளி இணையத்தில் மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதாவது குரங்கு மிகுந்த கவனத்துடன் ஃபைலின் பக்கங்களை திருப்பி பார்ப்பதையும், கணினியில் கீபோர்டை தட்டி தட்டி மிக ஆர்வமாக வேலை செய்வதையும் காணொளியில் காண முடிகின்றது.
குரங்கு வேலை செய்யும் வேகத்தை பார்த்தால் ப்ரமோஷன் வாங்காமல் விடாது போல் இருக்கிறது.
இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த வருடத்தின் மிகச் சிறந்த உழைப்பாளி என பதிவிட்டு காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.
அத்துடன் குரங்கு அலுவலகத்தில் புகுந்து கீ போர்டில் விளையாடுவதை, அருகில் இருந்த ஊழியர்கள் காணொளி எடுத்து வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.