எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு நேற்று கூடியபோது, இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.