இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
சமீபத்தில் ஜவான் படம் உலக அளவில் 1000 கோடியை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் அட்லீ.
இந்நிலையில் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜவான் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்..லவ் யூ ஷாருக்கான் சார் என்று பதிவிட்டுள்ளார்.