
2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் ஆரம்பக்கட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகிவருந்த 2023 உயர்தரப்பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளமை தெரிந்ததே.







