ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி என்பதுடன் இது தொடர்பில் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.