2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் கூறினார்.
பரீட்சைக்கான புதிய திகதி விவரம் அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளரால் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.