Date:

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்: சிக்கிய கும்பல்-வெளியான அதிர்ச்சி தகவல்

சீதுவ – தண்டுகங் ஓய பகுதியில் நபரொருவரை அடித்துக் கொன்று பயணப் பையில் சடலத்தை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாவெவ மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுசந்த ரஞ்சன் ரணசிங்க என்ற 36 வயதான திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரதான சந்தேகநபரின் மூத்த மகனை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவத்தின் அடிப்படையில் குறித்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பல இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாதம்பே, கட்டான, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞனும் சந்தேகநபர்களும் நட்பாக பழகியவர்கள் எனவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் குறித்த இளைஞனை சந்தேகநபர்கள் சந்தித்ததாகவும், குறித்த இளைஞனை சூட்சுமமாக தமது காரில் ஏற்றி கட்டான பிரதேசத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனிடம் பணம் கேட்டு கைகளாலும் தடியாலும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னரே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...