Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை…! வெளியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி,  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...