Date:

மக்களால் பசியுடன் நடக்க முடியாது – சந்திம வீரக்கொடி

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது நடைபாதைகளை உருவாக்குவதா அல்லது மக்களைப் பாதித்த வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதா என்று சிந்திக்க வேண்டும் என்று காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

”நாங்கள் பாதைகள் அமைப்பதற்கு எதிரானவர்கள் அல்ல, நாட்டின் பிற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றனவா அல்லது மக்களின் பசியை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் பசியுடன் மக்கள் நடக்க முடியாது.

தற்போது எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் சீனி வாங்க மக்கள் சதொசவுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஏனைய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

அத்தகைய நேரத்தில் எங்களில் சிலர் இந்த நடைபாதை பற்றி பேசுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களின் பெற்றோர்களும் இதனால் கடிந்து கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நேரத்தில், கட்சி பேதமின்றி நாட்டு மக்களின் பசியை போக்கவும், கொரோனா பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...