Date:

மகனுக்கு நேர்ந்த துயரத்தால் உயிரை மாய்த்த தாய்

குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மஹவ பொலிஸார் வெளியிட்ட தகவலுக்கு அமைய, உயிரிழந்த பெண்ணின் மகன் மேலும் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து நபர் ஒருவரை தாக்கியதாகவும், அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த பெண் உயிரை மாய்த்ததாகவும் ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...