Date:

கொழும்பின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவைப்பட்டால் ஏனைய ரயில் நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரயில் செலுத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

ரயில் தாமதமாக வருவதால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹொங்கொங் அணியை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால்...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...