Date:

மொராக்கோ பூகம்பத்திற்கு சற்று முன் பிறந்த குழந்தை; தாயுடன் கூடாரத்தில்

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால் அந்த குழந்தையின் வீதியோரத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் தாயுடன் இருப்பதாக கூறப்படுகின்றது

கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு மொராக்கோவை பாரிய பூகம்பம் தாக்குவதற்கு சிலநிமிடங்களிற்கு முன்னர் கதிஜாவின் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாயும் குழந்தையும் காயங்களுக்குள்ளாகாத போதிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழந்தை பிறந்து மூன்று மணித்தியாலங்களில் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.

மராகெஸிலிருந்து புதிதாக பிறந்த குழந்தையுடன் டடார்ட்டில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அந்த குடும்பத்தினர் செல்ல முயன்றனர். எனினும் மண்சரிவு காரணமாக அது சாத்தியமாகவில்லை இதன் பின்னர் அவர்கள் வீதியின் ஒரத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் வாழ்கின்றனர்.

எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்த அந்த தாயார், கடவுள் மாத்திரமே எங்களுடன் இருக்கின்றார் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை மொரோக்கா பூகம்பத்தில் 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் , அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் பலி எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள்...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...