ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் 171 படத்தையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் மீண்டும் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தலைவர் 171 படத்தின் அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






