Date:

இலங்கையில் பாரிய சைபர் தாக்குதல்: தரவுகளுக்கு ஆபத்து!

இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA ) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.

gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச நிறுவனங்களில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள் பல உள்ளன.

இந்த மின்னஞ்சல் ஊடாக மிகவும் முக்கிய அரச தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

குறித்த தாக்குதல் ransomware தாக்குதல் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகின்றது.

ஓவ் லைன் பெக்கப் (offline backup) எனப்படுகின்ற மேலதிக தரவுக் கட்டமைப்பொன்று இருக்காததால் இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டரை மாதங்கள் கடந்தும் மின்னஞ்சல்கள் காணாமல் போயுள்ளன ICTA குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரநிலை ஆயத்தக் குழுவுடன் இணைந்து காணாமல் போயுள்ள தகவல்களை மீளப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ICTA  நிறுவனத்தின் மூலோபாய தொடர்பாடல் தொடர்பான பணிப்பாளர் சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்

இவ்வாறு தரவுகள் அழிவடையும் சம்பவங்கள் மீள நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் நாளாந்தம் ஓவ் லைன் பெக்கப் (offline backup) செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தவிர பயன்படுத்துகின்ற செயலிகளை புதுப்பிக்கவும் வைரஸ் தாக்குதல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு முறைகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...