Date:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்…! வெளியான புள்ளிவிபரத்தால் அதிர்ச்சி

கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் 2832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இது 83% ஆகும். பொருளாதாரச் சிக்கல்களால், 2022ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது. இது 5.06% ஆகக் காட்டப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 593 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது 17.04% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

274 பேர் போதைக்கு அடிமையானவர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 8% ஆகும்.

மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 412 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது 12% ஆகும்.

2023ஆம் ஆண்டு தொடர்பான தற்கொலைத் தரவுகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சினால் பெறமுடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரிக்க நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உதவியதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...