புத்தளம் iSoft கல்லூரியின் விருது வழங்கல் விழா 30/08/2023 கந்தையா மண்டபத்தில் நடை பெற்றது. இந் நிகழ்வின் விஷேட அதிதியாக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் காலத்தின் தேவையாகும் எனவும்
கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்
கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியம் எனவும் தெரிவித்தார்.